பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை ஆயுதப்படை கேண்டீனில் முறைகேடு: போலீசார் புகார்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படை கேண்டீனில் ஊழல் அதிகரித்துள்ளதாக போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.இங்குள்ள கேண்டீனில் மாவட்ட அளவில் பணிபுரியும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாருக்கு மலிவு விலையில் மளிகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கேண்டீனில் பணிபுரியும் போலீசார் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள

சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படை கேண்டீனில் ஊழல் அதிகரித்துள்ளதாக போலீசார் புகார் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள கேண்டீனில் மாவட்ட அளவில் பணிபுரியும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசாருக்கு மலிவு விலையில் மளிகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கேண்டீனில் பணிபுரியும் போலீசார் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள இன்ஸ்பெக்டர் முதல் டி.எஸ்.பி., வரையிலான அதிகாரிகளுக்கு இலவசமாக பொருட்களை வழங்குகின்றனர்.

கேண்டீனுக்கு வாங்கப்படும் முக்கிய பொருட்கள், விலை உயர்ந்த பொருட்களை கணக்கில் கொண்டு வராமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விற்று விடுகின்றனர். கணக்கில் ஏற்றினால் தான் அனைத்து போலீசாரும் பொருட்களை தடையின்றி பெற முடியும். ஆனால் கணக்கில் ஏற்றாமல் உயர் அதிகாரிகள், தங்களது உறவினர்களுக்கு பொருட்களை விற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வெளியூர்களில் இருந்து வரும் போலீசார் உரிய பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொடர்ந்து எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கேட்டால் ஒதுக்கீடு இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் பிற மாவட்ட கேண்டீனில் அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைப்பதாக அம்மாவட்ட போலீசார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக போலீஸ்துறைக்கு சம்பந்தமே இல்லாத நபர்களுக்கும் கேண்டீனில் பொருள் விற்கின்றனர். இதனால் போலீசாருக்கு கேண்டீனில் பொருட்கள் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X