பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன பயிற்சி

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் குறித்து சக்கந்தி ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.சிவகங்கை வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். உதவி இயக்குநர் வளர்மதி நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் குறித்து

சிவகங்கை : சிவகங்கை வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் குறித்து சக்கந்தி ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

சிவகங்கை வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார். உதவி இயக்குநர் வளர்மதி நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கினார். தண்ணீர் வசதியில்லாத விவசாயிகள் நுண்ணீர் பாசனத்துடன் இணைந்து துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆழ்துளை கிணறு, டீசல், மின் மோட்டார், தரைமட்ட நீர் தேகக்கத்தொட்டி ஆகியவற்றிற்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும், என தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகர் கண்ணன் பயிர் சாகுபடி குறித்து பேசினார்.சிவகங்கை வேளாண் அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் உதயகுமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ராஜா, ஆனந்தவள்ளி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X