பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் வியாபாரிகள் கடை அடைப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் பராதிய மஸ்துார் யூனியன் மாவட்ட தலைவரும் லாரிசெட் அதிபருமான பால்பாண்டியன் அக். 1ல் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும் ,கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பான சூழல் அமைய கோரி, விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம், லாரி செட் உரிமையாளர்கள் சங்கம், பராதிய மஸ்துார் சங்கம், மெயின் பஜார்

விருதுநகர் : விருதுநகரில் பராதிய மஸ்துார் யூனியன் மாவட்ட தலைவரும் லாரிசெட் அதிபருமான பால்பாண்டியன் அக். 1ல் கொலை செய்யப்பட்டார்.

இதை கண்டித்தும் ,கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பான சூழல் அமைய கோரி, விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம், லாரி செட் உரிமையாளர்கள் சங்கம், பராதிய மஸ்துார் சங்கம், மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், பருப்பு வியாபாரிகள் சங்கம், டின் தயாரிப்பாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து நேற்று முழு கடையடைப்பு பேராட்டத்தை நடத்தினர். நகரின் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகள், லாரிகள் முற்றிலும் இயங்கவில்லை. நேற்று முழுவதும் லோடு ஏற்றுவது, இறக்குவது நிறுத்தப்பட்டிருந்தது.விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து நகராட்சி அலுலகம் வரை ஊர்வலம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடு காரணமாக ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. பாரதிய மஸ்துார் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் குருசாமி தலைமையில் பால்பாண்டியனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X