தமிழ்நாடு

முடியல! அரசு அலுவலகங்களில் இல்லை வசதிகள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், இங்கும் வரும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர் .மாவட்டத்தில தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் தலைநகரை தவிர்த்து ,நகர்

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், இங்கும் வரும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர் .

மாவட்டத்தில தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் தலைநகரை தவிர்த்து ,நகர் ,கிராமங்களிலும் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குடிநீர் வசதி, சுகாதார வளாகம், இருக்கை வசதி இல்லை. பொதுமக்களோ குடிநீர், சுகாதார வளாகத்திற்காக பெரிதும் சிரமப்படுகின்றனர். அலுவலகம் வருவோருக்கு தேவையான வேலையை உடனடியாக முடிந்தால் பரவாயில்லை. எந்த வேலையாக இருந்தாலும் குறைந்தது அரை நாள் செலவாகிறது. இந்த நேரங்களில் காத்திருக்கும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் .

சுகாதார வளாகம் இல்லாமல் ஆண்கள் எங்காவது அவசரத்திற்கு ஒதுங்கி விடுவர். பெண்களின் நிலைதான் பரிதாபம் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு கூட சரியான பாதை இல்லை. அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குடிநீர், சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் மக்களுக்கு இந்த வசதி இல்லாததால் இவர்கள் தினமும் அல்லல்பட வேண்டியுள்ளது . ஒரு சில அரசு அலுவலகங்களில் குடிநீர் வசதி இருந்தாலும் ம பராமரிக்காது காட்சி பொருளாகவே உள்ளது.............

ஏன் இந்த பாகுபாடு

அலுவலகங்கள் அனைத்திலும் அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எந்த வசதியும் இல்லை. குடிநீருக்காக கடைகளை தேடி வெளியே அலைய வேண்டியுள்ளது. சுகாதார வளாகம் இல்லாமல் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் மக்களுக்கும் காதார வளாகம் , குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.மைக்கேல், சமூக ஆர்வலர், சிவகாசி..........

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X