பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சேர்க்கைக்காக பத்திரிக்கை; வீடு வீடாக வழங்கும் அரசு ஆசிரியர்கள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிவகாசி : விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பத்திரிக்கை அடித்த ஆசிரியர்கள், அதைவீடு வீடாக சென்று வழங்கினர்.கொரோனா தொற்றினால் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை.பெரும்பாலான அரசுபள்ளிகளில் மாணவர்கள் இடை நின்றல் அதிகரித்துள்ளது. இது போன்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதன் புது

சிவகாசி : விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பத்திரிக்கை அடித்த ஆசிரியர்கள், அதைவீடு வீடாக சென்று வழங்கினர்.கொரோனா தொற்றினால் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை.

பெரும்பாலான அரசுபள்ளிகளில் மாணவர்கள் இடை நின்றல் அதிகரித்துள்ளது. இது போன்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதன் புது முயற்சியாக விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், அழைப்பிதழ் பத்திரிக்கை அடித்து வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். இதை வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி துவக்கி வைத்தார்.

தலைமையாசிரியர் தனபால் முன்னிலை வகித்தார். வட்டார வள மைய கருத்தாளர்கள் லட்சுமி, கோப்பெருந்தேவி, ஆசிரியர்கள் முருகன் , பராசக்தி கலந்துகொண்டனர்.தலைமையாசிரியர்: பள்ளி இயங்காததால் மாணவர்கள் இடை நின்றல் அதிகரித்துள்ளது.மீண்டும் மாணவர்களை விஜயதசமியன்று பள்ளிக்கு வர வைப்பதற்காக புது முயற்சியாக அரசு பள்ளியின் சிறப்பு, வசதி, சலுகைகளை எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கை அழைப்பிதழை வீடுவீடாக சென்று வழங்குகிறோம்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X