சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்கலை 'மாஜி' அதிகாரி வீட்டில் சோதனை

Added : அக் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வேலுார்:வேலுார், திருவள்ளுவர் பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.வேலுார் மாவட்டம், சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலை உள்ளது. இதன் கீழ் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள்
 பல்கலை 'மாஜி' அதிகாரி வீட்டில் சோதனை

வேலுார்:வேலுார், திருவள்ளுவர் பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

வேலுார் மாவட்டம், சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலை உள்ளது. இதன் கீழ் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் வருகின்றன.இங்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக, திருவாரூரைச் சேர்ந்த அசோகன், 2013 - 14ம் ஆண்டு பணிபுரிந்தார். இவர் தற்போது ஓய்வு பெற்று, காட்பாடி அருகே வி.ஜி.ராவ் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவர், வருமானத்திற்கு அதிகமாக 20 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு இவரது வீட்டில், வேலுார் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், 10 போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

வீடுகளில் இருந்து வெளியே செல்ல யாரையும்அனுமதிக்கவில்லை; மொபைல் போனில் யாருடனும் பேச அனுமதிக்கவில்லை.சோதனையில், அவர் வாங்கி குவித்து உள்ளதாக கூறப்படும் ஏராளமான சொத்து பத்திரங்கள், ஆவணங்கள், வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.இதில், அசோகன் பணியாற்றிய போது, அவரது தொடர்பில் உள்ள அலுவலர்கள் பலரது விபரம் சிக்கியுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனை முடிந்த பின் தான், முழு விபரம் தெரிய வரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.அசோகனின் சொந்த ஊர், திருவாரூர் அருகே உள்ள எருக்காட்டூர். இங்குள்ள இவரது வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.


ரூ.25 கோடிக்கு சொத்து

அசோகன் பங்களாவில் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை நடந்த சோதனையில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, நிலம், அடுக்குமாடி குடியிருப்பு, பங்கு பத்திரங்கள் மற்றும் நகை, பணம், 10 வங்கி பாஸ் புத்தகம், லாக்கர் கணக்கு விபரங்கள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இவர், 2013 - 14ம் ஆண்டில் திருவள்ளுவர் பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தபோது, பணி நியமனம், மதிப்பெண் சான்று திருத்தி தேர்ச்சி பெற வைத்தல்.பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 108 கல்லுாரிகளில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மோசடி, பகுதி நேரம், தொகுப்பூதியத்தில் வேலை செய்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ததில் முறைகேடு என பல்வேறு மோசடியில் ஈடுபட்டு,

சொத்து குவித்தது தெரியவந்தது.இது தொடர்பாக, அசோகனிடம் நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அசோகனுக்கு இரண்டு மனைவியர். இரண்டாவது மனைவி ரேணுகாதேவி காட்பாடியில் தங்கி, அங்குள்ள ஆக்சிலியம் கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரிடத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-202104:31:04 IST Report Abuse
meenakshisundaram ஆஹா என்னே ஒரு உண்மையான ஊழியன் ? முக கொள்கையை அப்படியே கடைபிடிச்சிருக்கானே ரெண்டு ?? அங்கனே ஒன்னு .இங்கனே ஒன்னு
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-அக்-202114:11:23 IST Report Abuse
raja "அசோகனின் சொந்த ஊர், திருவாரூர் அருகே உள்ள எருக்காட்டூர்".... ஓங்கோல் ளிலிருந்து ஓடியாந்த திருவாருர் "திருக்குவளை" கார குடும்பத்தினரை முந்த விடமாட்டாங்களே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-அக்-202106:00:40 IST Report Abuse
Girija பெயருக்கு ஏற்றார் போல் அரண்மனை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் ? பெயிண்ட் கம்பெனி விளம்பரம் போல் , அடடே புது சொகுசு வீடு , புது நிலம் , வாங்கி நிறைய பணம் , இரண்டு மனைவியர் இராஜபோக வாழ்க்கை பிரமாதம் ? எட்டு வருடம் கழித்து விசாரணை ? இடிக்குதே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X