பொது செய்தி

தமிழ்நாடு

காட்சி பொருளான அரசு கட்டடங்கள்; மெட்டுக்குண்டில் தொடரும் அலட்சியம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அரசு கட்டடங்கள் காட்சி பொருளாக மாறி மக்களுக்கும் பயன்படாமல் அரசு நிதியும் வீணாகுவதாக மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அருப்புக்கோட்டை அருகே மெட்டுக்குண்டு ஊராட்சியில் அரசம்பட்டி, பொட்டல்பட்டி, மெட்டுக்குண்டு கிராமங்கள், 10 க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2. 50 லட்சம் செலவில், ஆர்.ஒ., பிளான்ட்

அருப்புக்கோட்டை : அரசு கட்டடங்கள் காட்சி பொருளாக மாறி மக்களுக்கும் பயன்படாமல் அரசு நிதியும் வீணாகுவதாக மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே மெட்டுக்குண்டு ஊராட்சியில் அரசம்பட்டி, பொட்டல்பட்டி, மெட்டுக்குண்டு கிராமங்கள், 10 க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2. 50 லட்சம் செலவில், ஆர்.ஒ., பிளான்ட் கட்டப்பட்டு பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.இதை பொதுமக்கள் யப்னபாட்டிற்கு கொண்டு வர இது வரை ஒன்றிய அலுவலகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேவையின்றி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

பெருமாள் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் சேராமல் இருக்க சாக்கடை கட்டும் பணிக்காக எம்.எல்.ஏ., நிதியிலிருந்து பணிகள் துவங்கப்பட்டு ஒரு பகுதி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிக்கு நிதி தேவையாக உள்ளது. ஆண்களுக்கு என பொது கழிப்பறை தேவைப்படுகிறது. ஊராட்சி மூலம் கட்டப்பட்ட மயானம் முட்புதர்கள் முளைத்தும் தகனமேடை கட்டடம் சிதிலமடைந்து உள்ளது.

ஒரு காலத்தில் இங்குள்ள கண்மாய் தண்ணீர் மூலம் நெல் சாகுபடி அமோகமாக இருந்தது. கண்மாய் பராமரிப்பின்றி போனதால் நீர்வரத்து ஓடைகள் அடைப்பட்டு கண்மாய் வறண்டு காணப்படுகிறது.கண்மாயை துார் வாரி பராமரிப்பு செய்ய வேண்டும். கண்மாயில் தண்ணீர் இருந்தால் ஊரில் குடிநீர் ஆதாரம் பெருகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X