பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல; விருதுநகர் காங்., எம்.பி., காட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
விருதுநகர் : ''பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல,'' என ,மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார். விருதுநகரில் அவர் கூறியதாவது: நுாறு நாள் வேலை திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பா.ஜ., அண்ணாமலை, நாம் தமிழர் சீமான் ஆகியோர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து நேரில் இத்திட்டத்தின் பெருமையை பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான குடும்பங்களை காக்கும்

விருதுநகர் : ''பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல,'' என ,மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: நுாறு நாள் வேலை திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பா.ஜ., அண்ணாமலை, நாம் தமிழர் சீமான் ஆகியோர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து நேரில் இத்திட்டத்தின் பெருமையை பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான குடும்பங்களை காக்கும் இத்திட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது.

பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் பட்டாசு தயாரிக்க பேரியம் பயன்படுத்த கூடாது என 2018ல் போட்ட உத்தரவை நீதிமன்றம் மார்ச் 19ல் நீக்கியது. ஆனால் பழைய உத்தரவை மேற்கோள்காட்டி சி.பி.ஐ., மனுத்தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ., தனது நிலையை மாற்றி கொள்ள வேண்டும். டில்லியில் மாசு ஏற்பட காரணமான 26 காரணிகளில் பட்டாசு 26வது இடத்தில் உள்ளது.

முதல் ஆறு காரணிகளால் தான் 90 சதவீத மாசு ஏற்படுகிறது. அவ்வாறு இருக்க பட்டாசுக்கு தடை விதிப்பது ஏற்புடையதாக இல்லை. பட்டாசுக்கு எதிரான கருத்துடையவர்கள் யாராக இருந்தாலும் சிவகாசிக்கு நேரில் வந்து பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களின் நிலையையும் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X