சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
விருதுநகர், : ஞாயிற்றுக் கிழமை தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடப்பாதால் ஊழியர்கள் தங்கள் விடுமுறையை பறிகொடுக்கும் நிலை உள்ளது. தடுப்பூசி மருந்து காலியாகும் வரை முகாம் நடத்த உத்தரவிட்டிருப்பதால் ஊழியர்கள் புள்ளி விவரங்களை சமர்பித்து விட்டு வீடு திரும்புவதற்கு நள்ளிரவு ஆகி விடுகிறது. கொரோனா தடுப்பூசி முகாமை வெள்ளி. சனிக்கிழமை நடத்த வேண்டும் என்பன போன்ற

விருதுநகர், : ஞாயிற்றுக் கிழமை தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடப்பாதால் ஊழியர்கள் தங்கள் விடுமுறையை பறிகொடுக்கும் நிலை உள்ளது.

தடுப்பூசி மருந்து காலியாகும் வரை முகாம் நடத்த உத்தரவிட்டிருப்பதால் ஊழியர்கள் புள்ளி விவரங்களை சமர்பித்து விட்டு வீடு திரும்புவதற்கு நள்ளிரவு ஆகி விடுகிறது. கொரோனா தடுப்பூசி முகாமை வெள்ளி. சனிக்கிழமை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 12 இடங்களில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருதுநகரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட செய்ற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் , தடுப்பூசி மருந்து கிடங்கு முன் மாவட்ட பொருளாளர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாத்துாரில் கிளைச் செயலாளர் சுதந்திரகிளாரா, ராஜபாளையத்தில் கிளைத் தலைவர் ஜெகஜோதி ராமலிங்கம், வெம்பகோட்டையில் கிளை உறுப்பினர் ராகவன், சிவகாசியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், திருச்சுழியில் கிளைச் செயலாளர் சரவணன், நரிக்குடியில் ஊரக வளர்ச்சி கிளைத் தலைவர் ரவி, மல்லாங்கிணரில் கிளை உறுப்பினர் திருவெங்கடேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்துரில் கிளைத் தலைவர் பூபன் சக்கரவர்த்தி, அருப்புக்கோட்டையில் கிளைத் தலைவர் முருகதாஸ், வத்திராயிருப்பில் கிளைச் செயலாளர் குருநாகப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X