பொது செய்தி

தமிழ்நாடு

நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் 5 பதவிகளுக்கு 17 பேர் போட்டி; 22 ஓட்டுச்சாவடிகள் அமைப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 17 பேர் போட்டியிடுகின்றனர். நாளை தேர்தல் நடக்கிறது. 22 ஓட்டுச்சாவடிகளில் 11,945 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.மாவட்டத்தில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை தேர்தல் நடக்கும் நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், பெரியகுளம் ஒன்றியம் அழகர் நாயக்கன்பட்டி,

தேனி : தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 17 பேர் போட்டியிடுகின்றனர். நாளை தேர்தல் நடக்கிறது. 22 ஓட்டுச்சாவடிகளில் 11,945 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.மாவட்டத்தில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நாளை தேர்தல் நடக்கும் நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், பெரியகுளம் ஒன்றியம் அழகர் நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜதானியில் இருவரும், நாகலாபுரத்தில் மூவரும் களத்தில் உள்ளனர். கதிர்நரசிங்காபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இருவரும், ஆண்டிபட்டி ஒன்றியம் 19வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நால்வரும், க.மயிலாடும்பாறை ஒன்றியம் 8 வது வார்டுக்கு 6 பேரும் போட்டியிடுகின்றனர்.

5 பதவிகளுக்கு 17 பேர் போட்டியிடுகிறார்கள். 22 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11,945 பேர் ஓட்டளிக்க உள்ளனர். தேர்தல் பணியில் 98 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு 2 கட்ட பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் இன்று(அக்.,8) மூன்றாம் கட்ட பயிற்சிக்கு பின் தேர்தல் பணிக்கு செல்கின்றனர். காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ஆதார், லைசென்ஸ் உள்பட 11 ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம். ஓட்டுச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X