பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளம் அரசு நில மோசடி விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பரிந்துரை

Added : அக் 08, 2021
Share
Advertisement
தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடவீரநாயக்கன்பட்டி நில மோசடியில் மீட்கப்பட்டு 94.65 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட 6 அலுவலர்கள் உட்பட, மோசடி பட்டாக்களை வாங்கிய 69 பேர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி சர்வே எண் 814ல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ரூ.94 லட்சம் மதிப்பிலான 94.65 ஏக்கர் நிலம் மோசடி

தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடவீரநாயக்கன்பட்டி நில மோசடியில் மீட்கப்பட்டு 94.65 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்ட 6 அலுவலர்கள் உட்பட, மோசடி பட்டாக்களை வாங்கிய 69 பேர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி சர்வே எண் 814ல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ரூ.94 லட்சம் மதிப்பிலான 94.65 ஏக்கர் நிலம் மோசடி செய்து, 27 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த நில மோசடியில் தாசில்தார்கள் கிருஷ்ணக்குமார், ரத்தினமாலா, தேர்தல் துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி அக்., 4ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

முன்னதாக தாமரைக்குளம் அரசு புறம்போக்கு நிலத்தை தனது மனைவி பெயருக்கு பட்டா வழங்கிய சர்வேயர் சக்திவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மேலும், பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சியில் 56 ஏக்கர் அரசு நிலத்தை 42 பேருக்கு பட்டா போட்டு அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதற்காக சர்வேயர் பிச்சைமணி நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மோசடியாக வழங்கப்பட்ட அரசு இடத்தை பட்டாவாகவும், கூட்டுப் பட்டாவா கவும் பெற்ற 69 பேர், மோசடியில் ஈடுபட்ட 6 அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பெரியகுளம் சப்--கலெக்டர் ரிஷப், தேனி எஸ்.பி.,பிரவீன் உமேஷ் டோங்ரேவிடம் புகார் அளித்தார். பின், எஸ்.பி., ஆலோசனையின் படி, புகார் மனுவை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X