சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீச்சு

Added : அக் 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:நடுக்கடலில் இலங்கை படகை தமிழக மீனவர் படகு மோதி மூழ்கடித்ததால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி விரட்டியடித்தனர்.அக்.,6 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 560 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து

ராமேஸ்வரம்:நடுக்கடலில் இலங்கை படகை தமிழக மீனவர் படகு மோதி மூழ்கடித்ததால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி விரட்டியடித்தனர்.

அக்.,6 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 560 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பின் ஆவேசமடைந்த வீரர்கள் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கினர். மேலும் 20க்கு மேலான படகுகள் கடலில் இழுத்து வந்த வலைகளை வெட்டி மூழ்கடித்தனர்.

இதனால் பெரும் நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியது: அக்.,4 ல் இலங்கை மீனவர்கள் படகை நம் மீனவர்களின் படகு மோதி மூழ்கடித்தது. இதனால் நேற்று நம் மீனவர்கள் மீது கொலை வெறியுடன் கல்வீசி தாக்கியுள்ளனர். இதற்கு நமது மீனவர்கள் சிலர் வரம்பு மீறுவதே காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இலங்கை படகிற்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X