பொது செய்தி

தமிழ்நாடு

தேனி, பெரியகுளத்தில் ஆக்சிஜன் நிலையங்கள்; பிரதமர் மோடி காணொலியில் திறந்தார்

Added : அக் 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் நிலையங்களை நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் நிலையம்,பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியில் 500

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் நிலையங்களை நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் நிலையம்,பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் நிலையம் அமைக்கப்பட்டது. இரு ஆக்சிஜன் நிலையங்களை நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரியகுளம் மருத்துவமனை, தேனி மருத்துவக்கல்லுாரி ஆக்சிஜன் நிலைய மின்வசதி, கட்டமைப்புக்கு முறையே ரூ.32.40 லட்சம், ரூ.20.50 லட்சம் தமிழக அரசு வழங்கியது. பெரியகுளம் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சரவணக்குமார், கலெக்டர் முரளீதரன், சப்-கலெக்டர் ரிஷப், நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், தேனி மருத்துவக்கல்லுாரி டீன் பாலாஜிநாதன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X