மின்சார தீயை நீரால் அணைக்கவே கூடாது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார தீயை நீரால் அணைக்கவே கூடாது

Added : அக் 08, 2021
Share
திண்டுக்கல் : 'மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக் கூடாது' என, திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வினோதன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: மழைக்காலத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பி, பழுதான மின்கம்பங்களை தொடக் கூடாது. உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இடி, மின்னலின் போது 'டிவி', மிக்சி, கிரைண்டர், கணினி, அலைபேசியை

திண்டுக்கல் : 'மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரால் அணைக்கக் கூடாது' என, திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வினோதன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: மழைக்காலத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பி, பழுதான மின்கம்பங்களை தொடக் கூடாது. உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இடி, மின்னலின் போது 'டிவி', மிக்சி, கிரைண்டர், கணினி, அலைபேசியை பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் இருக்க கூடாது. ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகளை தொடக் கூடாது.

மின்கம்பம், அதனை தாங்கும் கம்பியில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.மின்கம்பத்தில் கொடி கட்டி துணி காய வைக்கக் கூடாது. மழை பெய்யும் போது மின்மாற்றி, மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டி, இழுவை கம்பிகளுக்கு அருகே செல்ல வேண்டாம். வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று மின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

இடி மின்னலின் போது மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலிக்கு அருகில் தஞ்சமடைய கூடாது. மின்சாரத்தினால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது. அவசர உதவிக்கு 94987 94987ல் பேசலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X