பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் சுகாதார நிலைய பணி

Added : அக் 08, 2021
Share
Advertisement
வடமதுரை : அய்யலுார் மணியகாரன்பட்டியில் துணை சுகாதார நிலைய கட்டட பணி இரு ஆண்டுகளாகியும் துவங்காமல் கிடப்பில் உள்ளது.அய்யலுார் பேரூராட்சி பகுதியை சுகாதாரத்துறையினர் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். 1982 முதல் கருவார்பட்டி, குப்பாம்பட்டி ஆகிய 2 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இவ்விரண்டிற்கும் சொந்த கட்டடம் கட்டி

வடமதுரை : அய்யலுார் மணியகாரன்பட்டியில் துணை சுகாதார நிலைய கட்டட பணி இரு ஆண்டுகளாகியும் துவங்காமல் கிடப்பில் உள்ளது.

அய்யலுார் பேரூராட்சி பகுதியை சுகாதாரத்துறையினர் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். 1982 முதல் கருவார்பட்டி, குப்பாம்பட்டி ஆகிய 2 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இவ்விரண்டிற்கும் சொந்த கட்டடம் கட்டி தரப்படாமல் கடந்த 38 ஆண்டுகளாக வாடகை இடங்களில் செயல்படுகின்றன.

அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருப்பதால் கருவார்பட்டி கிராமத்திற்கு பதிலாக மணியகாரன்பட்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க முடிவானது. இங்கு இடம் கிடைத்து கட்டட பணிக்கு கடந்த இரு ஆண்டிற்கு முன்னர் பூமி பூஜையும் நடந்தது. ஆனால் இதுவரையில் பணி துவங்காமல் கிடப்பில் இருப்பதால் கிராம மக்கள் ஏமாற்றத்தில்உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X