பொது செய்தி

தமிழ்நாடு

'எந்த அழைப்பையும் அலட்சியம் செய்வதில்லை'

Added : அக் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'பொதுமக்களிடம் இருந்து வரும் எந்த அழைப்புகளையும் அலட்சியம் செய்வதில்லை' என மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கிடரமணன் தெரிவித்தார்.அவர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக நம்மிடம் கூறியதாவது: மாவட்ட தீயணைப்புத் துறை எவ்வாறு செயல் படுகிறதுதிண்டுக்கல் மாவட்டத்தில் 10 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. பொதுமக்கள் நேரடியாக அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
 'எந்த அழைப்பையும் அலட்சியம் செய்வதில்லை'

திண்டுக்கல் : 'பொதுமக்களிடம் இருந்து வரும் எந்த அழைப்புகளையும் அலட்சியம் செய்வதில்லை' என மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கிடரமணன் தெரிவித்தார்.

அவர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக நம்மிடம் கூறியதாவது:

மாவட்ட தீயணைப்புத் துறை எவ்வாறு செயல் படுகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. பொதுமக்கள் நேரடியாக அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இல்லையெனில் பொதுவான எண் 101, 112, 108 என எந்த எண்ணுக்கு அழைத்தாலும் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு செல்லும். அங்கிருந்து தீயணைப்புத்துறை சார்ந்தது என்றால் எங்களுக்கு மாற்றிவிடுவர். அழைத்தவர்களின் அலைபேசி எண், என்ன மாதிரியான விபத்து என்பதை கேட்டுக் கொண்டு வீரர்கள் அங்கு விரைவர். தீயணைப்பு வீரர்கள் தயாராவது எப்படிஅழைப்பு வந்ததும் முதலில் எந்த மாதிரியான விபத்து என்பதை தெரிந்து கொள்வோம்.

தீ விபத்து, நெடுஞ்சாலை விபத்து, மீட்பு பணி, பாம்பு பிடித்தல், காஸ் சிலிண்டர் என பல வகை அபாயங்கள் உள்ளன. தீவிபத்து என்றால் அதற்கான ஆடைகளை அணிந்தாக வேண்டும். மற்ற விபத்துகள் என்றால் அதற்கேற்றாற்போல தயாராவோம். 24 மணி நேரமும் வீரர்கள் தயார் நிலையிலேயே இருப்பர். எப்போதும் தயார் நிலையில் எப்படிஅதுதான் எங்களின் பணி. ஒரு வாகனம் நிலையத்தில் நின்றாலே அது தயார் நிலையில் இருக்கிறது என்பதுதான் பொருள். செல்லும் இடத்திற்கு தேவையான பொருட்கள், இயந்திரங்கள், கயிறு உள்ளிட்டவை வாகனத்திலேயே முன்கூட்டியே தயாராக இருக்கும்.

4 ஆயிரம் லிட்டர் கொண்ட வாகனத்தில் நீர் எப்போதும் முழுமையாக நிரப்பி வைத்திருப்போம். தேவைப்படின் உள்ளாட்சி அமைப்புகளின் தண்ணீர் வாகனங்களுக்கு தகவல் கொடுத்து வரச் சொல்லி விடுவோம். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு நிமிடம் கணக்கு என்ற வகையில் சம்பவ இடத்திற்கு விரைவாக செல்ல முயற்சிப்போம். அதிகபட்சம் அழைப்பு வந்ததில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 15 நிமிடத்திற்குள் செல்வோம். இது துரத்திற்கு ஏற்றாற் போல் நேரம் மாறுபடும்.

மாவட்டத்தில் சமீப காலங்களாக எந்த மாதிரி அழைப்புகள் வருகின்றன

தீ விபத்துகள் தற்போது குறைந்து உள்ளன. குளம், கிணறுகளில் கால்நடைகள் விழுந்து விடுதல், சிறுவர்கள் தண்ணீரில் மூழ்குதல், குறிப்பாக பாம்பு வீடு, கடைகளுக்கு புகுந்து விடுதல் போன்ற அழைப்புகள் பிரதானமாக உள்ளன. பாம்பைப் பொறுத்தவரையில் பழநி பகுதிகளில் அதிகஅழைப்புகள் வரும்.

கால்நடைகள் கிணறு, குளங்களில் மாட்டிக் கொள்வது போன்றவை குஜிலியம்பாறை, வடமதுரை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் நடக்கிறது. காஸ் சிலிண்டர் தொடர்பான அழைப்புகள் மாதம் 10 முதல் 15 வரை வருகின்றன. எந்த அழைப்பையும் குறிப்பாக சிறுநாய்க்கு ஆபத்து என்றால் கூட அலட்சியம் செய்வது கிடையாது.

பாம்பு விஷயத்தில் அதனை அடிக்க கூடாது. தகவல் அளித்ததும் பாம்பை அடிப்பதற்கு முன்னால் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுவிட என்பதுதான் முதல் நோக்கமாக இருக்கும். பெரிய பாம்பாக இருந்தால் வனத்துறையினரிடம் ஒப்படைத்து விடுவோம். காஸ் சிலிண்டர் பிரச்னை சிறியதாகவே இருக்கும். அதனை உடனே சரி செய்து விடுவோம். ஆனால் மக்கள் பயந்து விடுவர். நெடுஞ்சாலை விபத்துகளில் ஆட்கள் சிக்கினால் மீட்பு பணிக்கு நாங்களே செல்வோம்.

அடிக்கடி சிறுவர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனரே

பாதுகாப்பின்றி சிறுவர், சிறுமியர்களை நீர்நிலைகள் பக்கம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். பள்ளி விடுமுறை காலமாக இருந்ததால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக தெரிகிறது. குழந்தைகள் எப்போதும் பெற்றோர் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.

விழிப்புணர்வு பணிகள் எவ்வாறு நடக்கிறது

தீயணைப்புத்துறை வீரர்கள் பேரிடர் மீட்புத் துறையினரோடு தயாராகின்றனர். பயிற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன் ஆபத்துநேரத்தில் தொழிற்சாலைகள், பணியாளர்கள் அதிகமுள்ள இடங்களில் எப்படி துரிதமாக செயல்படுவது என பயிற்சி அளிக்கிறோம்

தீபாவளி நெருங்குகிறது மக்களுக்கு நீங்கள் சொல்வ தென்ன

கூடுமானவரை பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு அறிவிக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பாதுகாப்போடு வெடிக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். தீக்காயங்கள் ஏற்படா வண்ணம் பெற்றோர் பாதுகாக்க வேண்டும். பெட்ரோல் பங்க், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களில் வெடிக்க கூடாது. பாதுகாப்பான தீபாவளியாக கொண்டாட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X