பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள் வக்கீல் மீது வழக்கு

Added : அக் 08, 2021
Share
Advertisement
லஞ்ச வி.ஏ.ஓ., கைது திருவாரூர்: திருவாரூர் அருகே, அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பாலசுப்ரமணியன், 37. இவரிடம், ஆணைவடபாதி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்பாபு, 40 என்பவர், தன் நிலத்திற்கு பட்டா மாற்றி தரும்படி கேட்டுள்ளார். அவர், 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.மனோஜ்பாபு, திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று 18 ஆயிரம் ரூபாயை வாங்கிய
 சில வரி செய்திகள் வக்கீல் மீது வழக்கு

லஞ்ச வி.ஏ.ஓ., கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே, அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பாலசுப்ரமணியன், 37. இவரிடம், ஆணைவடபாதி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்பாபு, 40 என்பவர், தன் நிலத்திற்கு பட்டா மாற்றி தரும்படி கேட்டுள்ளார். அவர், 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.மனோஜ்பாபு, திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று 18 ஆயிரம் ரூபாயை வாங்கிய பாலசுப்ரமணியனை, மறைந்து இருந்த போலீசார் கைது செய்தனர்.



மதுரை: மதுரை, அரசரடியைச் சேர்ந்தவர் சீதாராமன்; 2017 - 2020 வரை, மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞராக இருந்தார். இவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவாமல், காலம் தாழ்த்தி அதன் மூலம் பயன் அடைந்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விசாரணையில், வருமானத்திற்கு அதிகமாக 98.96 சதவீதம் சொத்து சேர்த்தது தெரிந்தது. நேற்று முன்தினம் அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டு, நகை உள்ளிட்ட சில ஆவணங்கள் குறித்து விசாரித்தனர்.

எச்.ராஜாக்கு 'பிடிவாரன்ட்'

ஸ்ரீவில்லிபுத்துார்: கடந்த 2018 செப்., 17ல், விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வீட்டு பெண்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹரிஹரன், விருதுநகர் பஜார் போலீசில் புகார் அளித்தார்.இதன்படி எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு, ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகாத எச்.ராஜாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி பரம்வீர், அக்., 27ல் அவரை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X