பொது செய்தி

தமிழ்நாடு

அரசு சிறப்பு மருத்துவமனையில் 2 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு சிறப்பு மருத்துவமனையில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இரண்டு இயந்திரங்கள் பிரதமர் கேர் நிதியில்இருந்து வழங்கப்பட்டது.வெங்கடேசன் எம்.பி., துவக்கி வைத்தார். கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, மருத்துவ

மதுரை : மதுரை அரசு சிறப்பு மருத்துவமனையில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இரண்டு இயந்திரங்கள் பிரதமர் கேர் நிதியில்இருந்து வழங்கப்பட்டது.

வெங்கடேசன் எம்.பி., துவக்கி வைத்தார். கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன், மயக்கவியல் பேராசிரியர்கள் செல்வகுமார், கல்யாணசுந்தரம் கலந்து கொண்டனர். ஒரு இயந்திரத்தின் மதிப்பு ரூ.1.25 கோடி.

தற்போது மருத்துவமனை பழைய கட்டடத்தில் நிமிடத்திற்கு 500, 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உள்ளன. புதிதாக 1000 லிட்டர் இயந்திரம் நிறுவப்பட்டு தனியார் நன்கொடை மூலம் தயாராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தில் நிமிடத்திற்கு 200, 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் செயல்படுகின்றன. இன்னொரு 1000 லிட்டர் நிறுவுவதற்கான பணிகள் நடக்கின்றன.

தோப்பூர் அரசு மருத்துவமனையில் 500, 1000 லிட்டர் உற்பத்தி இயந்திரங்கள் பயன்பாட்டிலும் மற்றொரு 1000 லிட்டருக்கான இயந்திரம் நிறுவும் பணி நடக்கிறது.தவிர சிறப்பு மருத்துவமனையில் 20 கே.எல், தீவிர சிகிச்சை பிரிவில் 6, பழைய கட்டடத்தில் 11 மற்றும் தோப்பூரில் 2 கிலோலிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன.

ஒரு லிட்டர் திரவ ஆக்சிஜனில் இருந்து 850 லிட்டர் வாயு ஆக்சிஜன் தயாரிக்க முடியும். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவைப்படும் எந்த வகை நோயாளிகள் வந்தாலும் வசதிகள் தயாராக உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X