கூட்டுறவு மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மூலம் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

Added : அக் 08, 2021
Share
மதுரை, : மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது: மாவட்டத்தில் 2021--22 பருவத்தில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆயிரம் நெல் மூடைகள் (ஒரு மூடை 40 கிலோ) அல்லது அதற்கு மேல் நெல் மூடைகள் தனிப்பட்ட பெரு விவசாயி அல்லது சிறு, குறு விவசாயிகள் குழு விற்கவரும் பட்சத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் கொள்முதல்

மதுரை, : மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியதாவது: மாவட்டத்தில் 2021--22 பருவத்தில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆயிரம் நெல் மூடைகள் (ஒரு மூடை 40 கிலோ) அல்லது அதற்கு மேல் நெல் மூடைகள் தனிப்பட்ட பெரு விவசாயி அல்லது சிறு, குறு விவசாயிகள் குழு விற்கவரும் பட்சத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடமாடும்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்துவிற்பனைக்கு வைத்துள்ள நெல் விவரங்களை இணை பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், டி.பி.கே.,ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா அருகில், மதுரை- 625 003 முகவரில் தெரிவிக்கலாம். தங்கள் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை இந்த நடமாடும் நெல்கொள்முதல் நிலையங்களில் விற்கலாம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X