ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி; போலீசார் அறிவுரை| Dinamalar

தமிழ்நாடு

ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி; போலீசார் அறிவுரை

Added : அக் 08, 2021
Share
திண்டுக்கல் : 'ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு வங்கி சார்ந்த விவரங்கள் ஏதும் ரயில்வே சார்பில் கேட்பதில்லை என்பதால் மோசடி நபர்களிடம் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்'என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் www.irctc.co.in இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதற்கென மின்னஞ்சல், அலைபேசி எண் போன்றவற்றை கொண்டு

திண்டுக்கல் : 'ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு வங்கி சார்ந்த விவரங்கள் ஏதும் ரயில்வே சார்பில் கேட்பதில்லை என்பதால் மோசடி நபர்களிடம் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்'என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் www.irctc.co.in இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதற்கென மின்னஞ்சல், அலைபேசி எண் போன்றவற்றை கொண்டு 'யூசர் ஐ.டி.' உருவாக்கப்படுகிறது. அதே சமயம், வங்கி கணக்கு, ஏ.டி.எம்., போன்ற எந்த தகவல்களையும் ரயில்வே சார்பில் கேட்கபடுவதில்லை. மீறி அதுபோன்ற தகவல்கள் கேட்கபடுமாயின் தவறான இணைதளத்தையோ அல்லது மோசடி கும்பலிடமோ சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

* கவனம் தேவை

போலீசார் கூறுகையில்,'' முன்பதிவு செய்பவர்கள் சரியான இணையதளத்தை தேர்வு செய்ய வேண்டும். முன்பதிவிற்காக தெரியாத நபர்களை அணுக கூடாது. நேரடியாக சென்று முன்திவு செய்வது நல்லது. மோசடி கும்பல்கள் அனைத்து வகைகளிலும் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் கவனம் தேவை'', என்றனர்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,''ரயில்வே சார்பில் வங்கி விபரங்களை எக்காரணத்திற்காகவும் கேட்பதில்லை. பயணிகள் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'', என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X