சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் வசந்தியின் கணவர், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை:பணம் பறிப்பு வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் வசந்தியின் கணவர், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத், பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சத்துடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். போலீசார் வழக்குஇன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை அழைத்து வந்த நால்வர் பணம் பறித்ததாக,

மதுரை:பணம் பறிப்பு வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் வசந்தியின் கணவர், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத், பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில், 10 லட்சத்துடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். போலீசார் வழக்குஇன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை அழைத்து வந்த நால்வர் பணம் பறித்ததாக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

ஆக., 27ல் வசந்தி கைதானார்.குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செப்., 30 முதல் நான்கு நாட்கள், வசந்திக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால ஜாமின் அனுமதித்தது.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.நீதிபதி: மனுதாரர் வசந்தி மற்றும் அவரது கணவர், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

விசாரணையில், 90 சதவீத கேள்விகளுக்கு பதில் கூற மனுதாரர் மறுத்துள்ளார். கணவரின் அலைபேசி எண் கேட்டபோது, ஞாபகம் இல்லை என மனுதாரர் தெரிவித்ததாக அரசு தரப்பு கூறுகிறது.இந்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்காவிடில், மனுதாரரை இன்னும் 10 ஆண்டுகளானாலும் போலீசார் கைது செய்திருக்க மாட்டார்கள். இது தான் உண்மை.


ஒத்திவைப்பு

காவல் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும். மனுதாரரின் கணவர் உடனடியாக விசாரணை அதிகாரி முன் ஆஜராவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.ஆஜராவதாக மனுதாரர் தரப்பு உத்தரவாதம் அளித்தது.நீதிபதி: மனுதாரரின் கணவர், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், மனுதாரருக்கு ஜாமின் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். விசாரணை, 8ம் தேதியான இன்று ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X