சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா நேற்று அரசு மதுக்கடையில் (5588) ஆய்வு செய்தார்.மதுபான வகைகளை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.200 வைத்து விற்றதுடன், அந்நிய நபர்களை கடையில் பணிபுரிய அனுமதித்ததும் தெரிந்தது. கடை மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல்பாண்டி, இளமாறனை 'சஸ்பெண்ட்' செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார். அத்துமீறி கடையில்

மதுரை : மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா நேற்று அரசு மதுக்கடையில் (5588) ஆய்வு செய்தார்.

மதுபான வகைகளை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.200 வைத்து விற்றதுடன், அந்நிய நபர்களை கடையில் பணிபுரிய அனுமதித்ததும் தெரிந்தது. கடை மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல்பாண்டி, இளமாறனை 'சஸ்பெண்ட்' செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார். அத்துமீறி கடையில் பணிபுரிந்தவர்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்ட மேலாளர் 5200 எண் கடையில் சோதனை செய்த போது விற்பனை துவங்காத நிலையில் ரூ.59,880 இருப்பு கண்டறியப்பட்டது.கடை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். ஏற்கனவே 5587 எண் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.70 வைத்து விற்ற கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல மேலாளர் அருண்சத்யா எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X