பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,விற்கு இரண்டாவது அலுவலகமா.. தொழிற்சங்கங்கள் கொதிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை : 'மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்திற்கு ஏற்கனவே அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலுவலகம் கட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நிலம் விதிமீறி ஒதுக்குவதா' என பிற சங்க நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. அ.தி.மு.க. தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட ஆறு கட்சிசார்

மதுரை : 'மதுரை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்திற்கு ஏற்கனவே அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலுவலகம் கட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நிலம் விதிமீறி ஒதுக்குவதா' என பிற சங்க நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. அ.தி.மு.க. தி.மு.க., கம்யூ., உள்ளிட்ட ஆறு கட்சிசார் சங்கங்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட அறை தற்போது புறநகர் கிளையாக செயல்படுகிறது.அ.தி.மு.க., ஆட்சியில் அக்கட்சியினர் 'ஏசி' வசதியுடன் பிரமாண்ட அலுவலகம் கட்டினர். அதுபோல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டாவது அலுவலகத்தை 800க்கும் மேற்பட்ட சதுர அடியில்அவர்கள் பிரமாண்டமாக கட்டத் துவங்கியுள்ளனர்.

இதற்காக 6 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இச்சங்கத்திற்குதலைமை அலுவலகம்எதிரே மாடி வசதியுடன் சொந்த கட்டடமும் உள்ளது.தற்போது பா.ஜ., உள்ளிட்ட மேலும் பல சங்கங்கள் இடம் கேட்டுள்ளனர்.ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும் வளாகத்திற்குள் விதிமீறி நிர்வாகம் இடம் ஒதுக்கினால் எதிர்கால விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இதை நிர்வாகம் ஊக்குவிக்க கூடாது என்றனர்.

இதற்கிடையே தினமலர் செய்தி எதிரொலியால் உதவி பொறியாளர் சேவியர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து சங்க கட்டடப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர்.எதிர்த்தவர் இடமாற்றம்தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.பி., தொழிற்சங்க நிர்வாகி கருப்பையா, மதுரை வடக்கு கிளையில் இருந்து திருப்புவனத்திற்கு மாற்றப்பட்டார்.

'இவ்வலுவலகத்தில் ஆறுமரங்களை வெட்டி, மாநகராட்சி அனுமதியின்றி தனியார் தொழிற்சங்கம் எவ்வாறு அரசு இடத்தில் அலுவலகம் கட்டலாம்' என நேற்று முன்தினம் தி.மு.க., நிர்வாகிகள் சிலருடன் வாக்குவாதம் செய்த அவரைநிர்வாகம் பணி மாற்றம் செய்துள்ளது. இது பிற தொழிற்சங்கங்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X