கால்வாயில் கழிவு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்        | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் கழிவு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்        

Added : அக் 08, 2021
Share
மதுரை : மதுரை நெல்லியேந்தல்பட்டி தவமணி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை யானைமலை பாசன கால்வாய் மூலம் கடம்பக்குடி மற்றும் நெல்லியேந்தல் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கால்வாயில் சிலர் கழிவு நீரை கலக்கவிடுகின்றனர். தண்ணீர் மாசுபடுகிறது. விவசாயம் பாதிக்கிறது. கழிவுநீர் கலப்பதை தடுத்து, கால்வாயை பாதுகாக்க மதுரை

மதுரை : மதுரை நெல்லியேந்தல்பட்டி தவமணி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை யானைமலை பாசன கால்வாய் மூலம் கடம்பக்குடி மற்றும் நெல்லியேந்தல் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கால்வாயில் சிலர் கழிவு நீரை கலக்கவிடுகின்றனர்.

தண்ணீர் மாசுபடுகிறது. விவசாயம் பாதிக்கிறது. கழிவுநீர் கலப்பதை தடுத்து, கால்வாயை பாதுகாக்க மதுரை கலெக்டருக்கு மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,11 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X