சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் மோதிய கார் 'தினமணி' நிருபர் உட்பட இருவர் பலி

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருச்சி:திருச்சி அருகே, மரத்தில் கார் மோதிய விபத்தில், 'தினமணி' நிருபர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் கோபி, 37. திருச்சியில் 'தினமணி' நாளிதழ் நிருபராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் செந்தில்குமார், 35; நாகை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருவரும், 'மாருதி ஸ்விப்ட்' காரில் கொல்லிமலை பகுதியில் உள்ள

திருச்சி:திருச்சி அருகே, மரத்தில் கார் மோதிய விபத்தில், 'தினமணி' நிருபர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் கோபி, 37. திருச்சியில் 'தினமணி' நாளிதழ் நிருபராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் செந்தில்குமார், 35; நாகை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருவரும், 'மாருதி ஸ்விப்ட்' காரில் கொல்லிமலை பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று, திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

நேற்று மதியம், சென்னை பைபாஸ் ரோட்டில் சிறுகனுார் அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும், அதே இடத்தில் உயிரிழந்தனர்.நிருபர் கோபிக்கு, மனைவி, 2 வயது, 4 மாதத்தில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இன்னும், இரண்டு நாட்களில் 4 மாத குழந்தைக்கு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு இருந்த சூழலில், விபத்தில் அவர் பலியானது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X