சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் 'ராகிங்' மோதல் கல்லுாரிக்கு 10 நாள் 'லீவ்'

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில், 'ராகிங்' காரணமாக மாணவர் தாக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில்விழா நடந்துள்ளது. இதில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்,இரண்டாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார்.காயமுற்ற மாணவர், மருத்துவமனை ஐ.சி.யு.,

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில், 'ராகிங்' காரணமாக மாணவர் தாக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் விடுதியில்விழா நடந்துள்ளது. இதில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்,இரண்டாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார்.காயமுற்ற மாணவர், மருத்துவமனை ஐ.சி.யு., வார்டில் அனுமதிக்கப்பட்டார். மாணவரின் தந்தை, கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால்,10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விடுதி மாணவர்கள் வெளியேற மறுத்து விட்டனர். இதனால், திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X