சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை குடிநீர் திட்டம் லோயர்கேம்பில் ஆய்வு: விவசாயிகள் போலீசில் புகார்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கூடலூர்:மதுரை குடிநீர் திட்டம் தொடர்பாக லோயர்கேம்பில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் லோயர்கேம்ப் போலீசில் புகார் செய்தனர்.தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ரூ.1295 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. குழாய்

கூடலூர்:மதுரை குடிநீர் திட்டம் தொடர்பாக லோயர்கேம்பில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் லோயர்கேம்ப் போலீசில் புகார் செய்தனர்.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ரூ.1295 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இத்திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் மீறி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து ரகசிய ஆய்வுகள் செய்து விட்டு செல்கின்றனர்.நேற்று லோயர்கேம்ப் பகுதியில் மதுரை மாநகராட்சி சர்வேயர் சிவா தலைமையில் 10 பேர் கொண்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகள், எதிர்ப்பை மீறி ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருவதால் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் லோயர்கேம்ப் போலீசில் புகார் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X