மகளிருக்கு ரூ.131 கோடியில் கடல் பாசி வளர்ப்பு திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிருக்கு ரூ.131 கோடியில் கடல் பாசி வளர்ப்பு திட்டம்

Added : அக் 08, 2021
Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீனவ மகளிர் பத்தாயிரம் பேருக்கு ரூ.131 கோடியில் கடல் பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.பாக்ஜலசந்தி கடல் பகுதிகளான ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, பாம்பன் கடலோர மீனவர் கிராமங்களில் அதிகளவில் கப்பா பைக்கஸ் என்ற வகை பாசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை பாசிகள் உரம், உணவு மற்றும் மருந்து பொருள்கள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீனவ மகளிர் பத்தாயிரம் பேருக்கு ரூ.131 கோடியில் கடல் பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பாக்ஜலசந்தி கடல் பகுதிகளான ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, பாம்பன் கடலோர மீனவர் கிராமங்களில் அதிகளவில் கப்பா பைக்கஸ் என்ற வகை பாசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகை பாசிகள் உரம், உணவு மற்றும் மருந்து பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது. இவற்றை உற்பத்தி செய்யும் மீனவ மகளிருக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

தற்போது புதிதாக மத்திய அரசின் பிரதமர் ஒருங்கிணைந்த பாசி வளர்ப்பு திட்டத்தில் பத்தாயிரம் மகளிருக்கு பாசி வளர்ப்பு மிதவைகள் வழங்குவதற்காக ரூ.131 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X