சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் அரசு பஸ்சில் ஆபாசமாக பேசி பள்ளி மாணவர்கள் ரகளை: கண்டித்த கண்டக்டருக்கு அடி

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை:மதுரையில் அரசு பஸ்சில் பயணித்த பள்ளி மாணவர்கள் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதை கண்டித்த கண்டக்டருக்கு அடி விழுந்தது.மதுரை மாட்டுத்தாவணி சுற்று வட்ட அரசு பஸ், நேற்று மதியம் 1:30 மணிக்கு புதுார் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. டிரைவர் இளையராஜா ஓட்டினார். புதுார் தாமரைதொட்டியில் தல்லாகுளம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 25

மதுரை:மதுரையில் அரசு பஸ்சில் பயணித்த பள்ளி மாணவர்கள் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதை கண்டித்த கண்டக்டருக்கு அடி விழுந்தது.
மதுரை மாட்டுத்தாவணி சுற்று வட்ட அரசு பஸ், நேற்று மதியம் 1:30 மணிக்கு புதுார் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. டிரைவர் இளையராஜா ஓட்டினார்.
புதுார் தாமரைதொட்டியில் தல்லாகுளம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 25 பேர் ஏறினர். சில நிமிடங்களிலேயே தங்களுக்குள் ஜாலியாக பேசியவர்கள், ஆபாசமாக பேசத்தொடங்கினர். இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களை ஆபாசமாக திட்டினர்.

இதை கண்டக்டர் சூரிய ஹரிஹரன் கண்டிக்க, அவரையும் ஆபாசமாக பேசினர். அதற்குள் மாணவர்கள் இறங்க வேண்டிய தல்லாகுளம் பெருமாள் கோயில் ஸ்டாப் வந்தது. ஆனால் டிரைவர் அங்கு நிறுத்தாமல் கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் முன் வந்து பஸ்சை நிறுத்தினார். மாணவர்கள் பஸ்சை விட்டு ஓட முயன்றபோது கண்டக்டர் தடுத்தார். அவரை சில மாணவர்கள் சேர்ந்து தாக்கினர்.

இதைதொடர்ந்து மாணவர்களை தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அங்கு மாணவர்கள் தங்கி படிக்கும் விளையாட்டு விடுதி மேலாளர் பேச்சுவார்த்தைக்கு பின் கண்டக்டரிடம் மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர். பின்னர் 'புகார் கொடுக்க விரும்பவில்லை' என எழுதி கொடுத்துவிட்டு கண்டக்டர் புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X