கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பணம் பறிப்பு வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுரை:பணம் பறிப்பு வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் வசந்தியின் கணவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இளையான்குடி அர்ஷத் பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் ரூ. 10 லட்சத்துடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி பணம் பறித்ததாக குற்றப்பிரிவு

மதுரை:பணம் பறிப்பு வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் வசந்தியின் கணவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இளையான்குடி அர்ஷத் பணத்தை இரட்டிப்பாக்கும் ஆசையில் ரூ. 10 லட்சத்துடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார். இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அர்ஷத்தை அழைத்து வந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி பணம் பறித்ததாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். ஆக.,27 ல் வசந்தி கைதானார்.
குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செப்.,30 முதல் 4 நாட்கள் மனுதாரர் வசந்திக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் அனுமதித்தது.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

நீதிபதி: மனுதாரர் மற்றும் அவரது கணவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. விசாரணையில் 90 சதவீத கேள்விகளுக்கு மனுதாரர் பதில்கூற மறுத்துள்ளார். கணவரின் அலைபேசி எண் கேட்டபோது ஞாபகம் இல்லை என மனுதாரர் தெரிவித்தாக அரசுத் தரப்பு கூறுகிறது. இந்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்காவிடில் மனுதாரரை இன்னும் 10 ஆண்டுகளானாலும் போலீசார் கைது செய்திருக்கமாட்டார்கள். இதுதான் உண்மை. காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்.

மனுதாரரின் கணவர் உடனடியாக விசாரணை அதிகாரி முன் ஆஜராவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.

மனுதாரர் தரப்பு உத்தரவாதம் அளித்தது.

நீதிபதி: மனுதாரரின் கணவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்பட்சத்தில் மனுதாரருக்கு ஜாமின் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். விசாரணை இன்று (அக்.,8) ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X