சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' புகழ் மதுரை போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

Added : அக் 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரை:மதுரையில் ஆயில் மசாஜ் செய்த உடலோடு, உள்ளாடையுடன் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை புல்லாங்குழலில் கேட்டு ரசித்த ஆயுதப்படை துணைகமிஷனர் சோமசுந்தரம், தினமலர் செய்தி எதிரொலியாக சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.துணைகமிஷனர் சோமசுந்தரம், ஏற்கனவே மதுரையில் உதவிகமிஷனராக இருந்தபோது இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியவர்.
 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' புகழ் மதுரை போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

மதுரை:மதுரையில் ஆயில் மசாஜ் செய்த உடலோடு, உள்ளாடையுடன் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை புல்லாங்குழலில் கேட்டு ரசித்த ஆயுதப்படை துணைகமிஷனர் சோமசுந்தரம், தினமலர் செய்தி எதிரொலியாக சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

துணைகமிஷனர் சோமசுந்தரம், ஏற்கனவே மதுரையில் உதவிகமிஷனராக இருந்தபோது இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியவர். பின்னர் துாத்துக்குடி, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றிவிட்டு பதவி உயர்வுடன் மதுரை வந்தார். சில நாட்களுக்கு முன் உள்ளாடையுடன் ஆயில் மசாஜ் செய்த உடலோடு இவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ்காரர் ஒருவர் புல்லாங்குழலில் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை இசைத்தார்.

அருகில் காலி மதுபாட்டில் இருந்தது.கண்ணியமிக்க போலீஸ் பதவியில் இருந்து கொண்டு சோமசுந்தரம் தன் சொந்த விஷயங்களுக்கு போலீசாரை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்த நிலையில் நேற்று சென்னை ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-அக்-202114:01:36 IST Report Abuse
Mani . V ஏன் பணி நீக்கம் செய்ய முடியாதா?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
10-அக்-202117:55:03 IST Report Abuse
Tamilnesan இது போன்ற சம்பவம் வெளிநாட்டில் நடந்திருந்தால், நிரந்தர பனி நீக்கம் செய்யப்பட்டு, சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டிருக்கும்........இங்கு ஜனநாயகம் என்கிற போர்வையில் மக்கள் வரிப்பணம் கொள்ளை போகிறது.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
10-அக்-202117:52:49 IST Report Abuse
Tamilnesan எந்த பட்டியியலில் வேண்டுமானால் இருக்கட்டும்...........வேலை இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் ........ இவற்றை வேடிக்கை பார்க்கும் நீதி மன்றங்கள். ஐயகோ ......இந்தியா ஜனநாயக நாடாயிற்றே. இங்கு எந்த குற்றங்களுக்கும் தண்டனை கிடையாதே.......இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X