பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு கலா உத்சவ் போட்டிகள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:பள்ளி அளவிலான, கலாஉத்சவ் போட்டிகளை வரும், 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் கலைத்திறனை வெளிக்கொணர, 2015ம் ஆண்டு முதல், 21 வகையான போட்டிகள், மாணவர், மாணவியருக்கு பிரத்யேகமாக நடத்தி பரிசளிக்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டை போல நடப்பாண்டும்,

கோவை:பள்ளி அளவிலான, கலாஉத்சவ் போட்டிகளை வரும், 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் கலைத்திறனை வெளிக்கொணர, 2015ம் ஆண்டு முதல், 21 வகையான போட்டிகள், மாணவர், மாணவியருக்கு பிரத்யேகமாக நடத்தி பரிசளிக்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டை போல நடப்பாண்டும், இப்போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம் மற்றும் காண்கலை ஆகிய, நான்கு பிரிவுகளின் கீழ், ஒன்பது வகையான போட்டிகளாக, இருபாலருக்கும் தனித்தனியாகவும், குழுவாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளி அளவிலான போட்டிகளை, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வரும் 12ம் தேதிக்குள் நடத்தி, ஒளிப்பதிவு செய்து, முதலிடம் பெறுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X