பொது செய்தி

தமிழ்நாடு

வன மரபியல் நிறுவனத்தில் வன உயிரின வார விழா

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை;கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்படும் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், தேசிய வன உயிரின வார விழா நடந்தது.'பேஸ்புக் லைவ்' மூலம் டிஜிட்டல் முறையில் நடந்த விழாவில், 'என்விஸ்' ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன் வாரியர் பேசுகையில், ''வன விலங்கு வார விழா என்பது, இயற்கையில் சுதந்திரமாக வாழும் அனைத்து உயிரினங்களுக்காகவும்

கோவை;கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்படும் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், தேசிய வன உயிரின வார விழா நடந்தது.'பேஸ்புக் லைவ்' மூலம் டிஜிட்டல் முறையில் நடந்த விழாவில், 'என்விஸ்' ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன் வாரியர் பேசுகையில், ''வன விலங்கு வார விழா என்பது, இயற்கையில் சுதந்திரமாக வாழும் அனைத்து உயிரினங்களுக்காகவும் நடத்தப்படுகிறது,'' என்றார்.வன மரபியல் நிறுவன இயக்குனர் குன்னிகண்ணன் பேசுகையில், ''சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் வன விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவிகரமாக உள்ளன.மகரந்தச் சேர்க்கை, முளைப்பு, விதை பரவல், மண் உருவாக்கம், ஊட்டச்சத்து உருவாக்கம், பூச்சி கட்டுப்பாடு போன்ற பல்வேறு செயல்முறைகளில், வன விலங்குகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது,'' என்றார்.'வன விலங்குகளின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடந்த ஆன்லைன் சொற்பொழிவு போட்டியில், கோவை ஜி.ஆர்.டி., பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ், சிருஷ்டி, கொல்கத்தா பள்ளி மாணவி காஜல் சாஹ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.நிகழ்ச்சியில், வன விலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் சுவரொட்டி வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X