மீனாட்சி அம்மன் கோயில் கடைகள் காலி செய்ய 15 நாள் உயர்நீதிமன்றம் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் கடைகள் காலி செய்ய 15 நாள் உயர்நீதிமன்றம் தடை

Added : அக் 08, 2021
Share
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளை காலி செய்வதற்கு எதிரான வழக்கில் 15 நாட்களுக்கு அறநிலையத்துறை எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடைகள் கலைநயமிக்க சிற்பங்களை மறைக்கின்றன. சிற்பங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றின் பாதுகாப்புக் கருதி கடைக்காரர்களின் வாடகை உரிமை

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளை காலி செய்வதற்கு எதிரான வழக்கில் 15 நாட்களுக்கு அறநிலையத்துறை எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடைகள் கலைநயமிக்க சிற்பங்களை மறைக்கின்றன. சிற்பங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றின் பாதுகாப்புக் கருதி கடைக்காரர்களின் வாடகை உரிமை ரத்து செய்யப்படுகிறது. ஆக்கிரமித்துள்ள இடத்திலிருந்து வெளியேறி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் இன்று (அக்.,8) காவல்துறை, வருவாய்த்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இடம் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என அறநிலையத்துறை உதவி கமிஷனர் செப்.,24 ல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைக்காரர்கள் சங்கம் தலைவர் ராஜூநாகுலு உட்பட சிலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:உதவி கமிஷனர் சரியாக பரிசீலிக்காமல் அவசரகதியில் உத்தரவிட்டுள்ளார். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். அவர் இறுதி முடிவெடுக்கும்வரை எங்களை வெளியேற்றக்கூடாது. உதவி கமிஷனரின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி: மேல்முறையீட்டு மனு மீது அறநிலையத்துறை கமிஷனர் 3 மாதங்களில் இறுதி முடிவெடுக்க வேண்டும். கடைக்காரர்கள் மீது 15 நாட்களுக்கு எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X