கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஒடிஷா பெண் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி

Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:விபத்தில் இறந்த ஒடிஷா பெண் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் அருண். பிழைப்பு தேடி குடும்பத்துடன் கோவைக்கு வந்தார். சிங்காநல்லுார் அருகே வெள்ளலுார் ரோட்டில் வசித்து வந்தனர். அவரது மனைவி ருக்மணிமாலிக் அன்னுாரிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.2015, செப்., 21ல், அன்னுார்- மேட்டுப்பாளையம் ரோட்டில்,
 ஒடிஷா  பெண் குடும்பத்துக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி

கோவை:விபத்தில் இறந்த ஒடிஷா பெண் குடும்பத்துக்கு இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் அருண். பிழைப்பு தேடி குடும்பத்துடன் கோவைக்கு வந்தார். சிங்காநல்லுார் அருகே வெள்ளலுார் ரோட்டில் வசித்து வந்தனர். அவரது மனைவி ருக்மணிமாலிக் அன்னுாரிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்தார்.2015, செப்., 21ல், அன்னுார்- மேட்டுப்பாளையம் ரோட்டில், ருக்மணி சாலையை கடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் சிக்கி பலியானார். இழப்பீடு கேட்டு, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் அருண் வழக்கு தாக்கல் செய்தார். ருக்மணி மாலிக் குடும்பத்திற்கு, 7.40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க கோரி, சென்னை ஐகோர்ட்டில், 2019ல் அப்பீல் செய்தனர். 13.32 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகும், இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் கோவை- திருச்சி செல்லும், கோவை கோட்ட அரசு பஸ், காந்திபுரத்தில் நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
08-அக்-202115:26:36 IST Report Abuse
canchi ravi போற்றத்தக்க உத்தரவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X