கோவையில் ஏ.டி.எம்.,கார்டு பெங்களூருவில் பணம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஏ.டி.எம்.,கார்டு பெங்களூருவில் பணம் திருட்டு

Added : அக் 08, 2021
Share
கோவை;ஏ.டி.எம்., கார்டு கையில் இருக்கும் போதே, வங்கிக்கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஜி.என்., மில்ஸை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ், 37. இவர் பந்தன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம், 23ம் தேதி கோவையில் இருந்த போது, அவரது மொபைல்போனுக்கு பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம்., எந்திரம் மூலம் இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம்

கோவை;ஏ.டி.எம்., கார்டு கையில் இருக்கும் போதே, வங்கிக்கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஜி.என்., மில்ஸை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ், 37. இவர் பந்தன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம், 23ம் தேதி கோவையில் இருந்த போது, அவரது மொபைல்போனுக்கு பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம்., எந்திரம் மூலம் இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் பணம் எடுத்தது போல் குறுந்தகவல் வந்தது.ஏ.டி.எம்., அவரிடம் இருக்கும் போது, பணம் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் தாமஸ், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜார்ஜ் தாமஸ் வங்கிக்கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து, அதிலிருந்து பணத்தை எடுத்தது தெரிந்தது. பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X