பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பணிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:பி.எஸ்.ஜி., மருத்துவமனை, டே டு டே ெஹல்த் இந்தியாவுடன் இணைந்து, மருத்துவ பணியை மேற்கொள்கிறது. இதற்கான நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. டே டு டே ெஹல்த் இந்தியா நிறுவனர் பிரேம் சர்மா பேசுகையில், ''சிக்கலான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவமனையின் எல்லைக்கு அப்பாற்பட்டு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் பி.எஸ்.ஜி.,

கோவை:பி.எஸ்.ஜி., மருத்துவமனை, டே டு டே ெஹல்த் இந்தியாவுடன் இணைந்து, மருத்துவ பணியை மேற்கொள்கிறது. இதற்கான நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. டே டு டே ெஹல்த் இந்தியா நிறுவனர் பிரேம் சர்மா பேசுகையில், ''சிக்கலான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு, மருத்துவமனையின் எல்லைக்கு அப்பாற்பட்டு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் பி.எஸ்.ஜி., உள்ளிட்ட, 11 முன்னணி மருத்துவமனைகள் எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளன,'' என்றார்.நிறுவனத்தின் துணைத்தலைவர்(விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) த்ரூமில் சொரத்தியா கூறுகையில், ''தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பை மேற்கொள்கிறோம். தமிழகத்தில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுடன் நாங்கள் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் மூலம், உயர்தர மற்றும் தனிப்பட்ட சுகாதார சேவைகளை வழங்குகிறோம். நோயாளிகளின் மருத்துவ, உடல் மற்றும் மனநல தேவைகளை நிவர்த்தி செய்கிறது, டே டு டே டிஜிட்டல் ெஹல்த் திட்டம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X