பொது செய்தி

தமிழ்நாடு

பி.எப்., சந்தாதாரர்கள் குறை தீர்ப்பு கூட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்தில் 'நிதி ஆப்பே நிகட்' என்ற பெயரில், ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம், மண்டல பி.எப்., கமிஷனர் தலைமையில் வரும், 11ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.பி.எப்., சந்தாதாரர்களுக்கு காலை, 11:00 முதல் 12:00 மணி வரையும், தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்) பகல், 12:00 முதல் 1:00 மணி

கோவை:கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்தில் 'நிதி ஆப்பே நிகட்' என்ற பெயரில், ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம், மண்டல பி.எப்., கமிஷனர் தலைமையில் வரும், 11ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.பி.எப்., சந்தாதாரர்களுக்கு காலை, 11:00 முதல் 12:00 மணி வரையும், தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்) பகல், 12:00 முதல் 1:00 மணி வரையும், ஓய்வூதியர்களுக்கு 2:30 முதல் 3:30 மணி வரையும் நடக்கிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வைப்பு நிதி யூஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் மொபைல் போன் எண்கள், இ-மெயில் (கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்) ஆகிய விபரங்களுடன், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, www.pghs.rocbe@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டும். தரப்பட்டுள்ள இ-மெயிலுக்கு அன்றைய தினம், ஆன்லைன் இணைப்பு வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X