பொது செய்தி

இந்தியா

'ஆசியான் கூட்டுறவை மேம்படுத்துவது அவசியம்'

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:''இந்தியா - ஆசியான் நாடுகள் இடையிலான கூட்டுறவை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியத்தை கொரோனா உணர்த்தியுள்ளது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்னாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் அடங்கியது 'ஆசியான்' அமைப்பு.இந்த அமைப்பு தொடர்பாக

புதுடில்லி:''இந்தியா - ஆசியான் நாடுகள் இடையிலான கூட்டுறவை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியத்தை கொரோனா உணர்த்தியுள்ளது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்னாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் அடங்கியது 'ஆசியான்' அமைப்பு.இந்த அமைப்பு தொடர்பாக டில்லியில் நடந்த இந்திய தொழிலக கூட்டமைப்பின் கருத்தரங்கில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியாவின் சர்வதேச பொருளாதார தொடர்பின் முக்கிய மையங்களாக ஆசியான் நாடுகள் உள்ளன. அந்நாடுகளுடன் இந்தியாவுக்கு உள்ள கூட்டுறவை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியத்தை, கொரோனா தாக்கம் உணர்த்தியுள்ளது.

இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தின் மையமாக ஆசியான் நாடுகள் உள்ளன. அதனால் அவற்றுடன் இந்தியாவிற்கு உள்ள உறவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.குறிப்பிடத்தக்க இந்த நல்லுறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உரிய செயல் திட்டங்கள் குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும்.

ஆசியான் நாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் சமுக, பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது, கொரோனாவால் மேலும் அதிகரித்துள்ளது.ஆசியான் நாடுகள் இந்தியாவின் வரலாறு, புவியியல், கலாசாரத்துடன் தொடர்புள்ளவை. கடந்த 25 ஆண்டுகளில் ஆசியான் - இந்தியா உறவு வளர்ச்சி அடைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X