தமிழ்நாடு

பொதுமக்களுக்கு நினைவூட்ட மாநகராட்சியில் 'கால் சென்டர்'; சொத்து வரி கட்டியாச்சா!

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை;சொத்து வரி, குடிநீர் கட்டணம், வாடகை இனங்கள் செலுத்துவது தொடர்பாக, வரி விதிப்புதாரர்களுக்கு நினைவூட்ட, 'கால் சென்டர்' போன்ற கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:அறிவுசார் மையம் கட்டுவது தொடர்பாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது, அதற்கான இடம் தேர்வு செய்திருக்கிறோம். மாணவர்கள் அறிவுசார்ந்த
பொதுமக்களுக்கு நினைவூட்ட மாநகராட்சியில் 'கால் சென்டர்'; சொத்து வரி கட்டியாச்சா!

கோவை;சொத்து வரி, குடிநீர் கட்டணம், வாடகை இனங்கள் செலுத்துவது தொடர்பாக, வரி விதிப்புதாரர்களுக்கு நினைவூட்ட, 'கால் சென்டர்' போன்ற கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:அறிவுசார் மையம் கட்டுவது தொடர்பாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது, அதற்கான இடம் தேர்வு செய்திருக்கிறோம். மாணவர்கள் அறிவுசார்ந்த விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு தேவையான புத்தகங்களுடன், நுாலகம் மற்றும் படிப்பதற்கான வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கு வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது; கட்டுமான பணி முடிந்திருக்கிறது. 'சாப்ட்வேர் அப்டேட்' செய்யும் வேலை நடந்து வருகிறது.தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்பாடு, குடிநீர் கசிவு உள்ளிட்ட தகவல்களை சேகரித்து பராமரிக்க முடியும். சொத்து வரி, குடிநீர் கட்டணம், வாடகை இனங்கள் செலுத்துவது தொடர்பாக, வரி விதிப்புதாரர்களுக்கு நினைவூட்ட, 'கால் சென்டர்' போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்த, நிலுவை வரிகளை வசூலித்து வருகிறோம். 'சீல்' வைக்கும் நடவடிக்கை எடுத்ததும், வாடகை இனங்கள் வசூல் சற்று அதிகரித்திருக்கிறது.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேபிள் கொண்டு செல்வதற்கான வழித்தட வாடகையாக, 7 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற வாடகை இதுநாள் வரை வசூலிக்கப்படாமல் இருந்தது.மத்திய அரசு மானிய நிதி, ஆண்டுக்கு இரு முறை கிடைக்கும். மாநில அரசு நிதி குறைவாகவே கிடைத்திருக்கிறது. எரிபொருள் செலவு குறைப்பு மற்றும் தேவையற்ற செலவினத்தை தவிர்க்க முயற்சித்து வருகிறோம்.வருவாயில் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகள் போக, உபரியாக இருக்கும் தொகையில், ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவை தொகை வழங்கி வருகிறோம்.இவ்வாறு, கமிஷனர் ராஜகோபால் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X