பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பால் மருதமலை ரோடு 'கசகச':அத்தனையையும் தூக்கி வீச கமிஷனர் உத்தரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை, மருதமலை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்,வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை அமைத்து சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வாரச்சந்தையை வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பாக,

கோவை:கோவை, மருதமலை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்,வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை அமைத்து சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வாரச்சந்தையை வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து பிரச்னை ஏற்படாத அளவுக்கு மாற்று இடம் தேர்வு செய்ய, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மருதமலை மெயின் ரோடு ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், விபத்து ஏற்படுவதாக, புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, புலஅளவீடு புத்தகத்தைக் கொண்டு, கமிஷனர் ஆய்வு செய்தார்.நில அளவீடு செய்து, குறியீடு செய்து, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தினார். வேளாண் பல்கலை அருகே திட்டச்சாலையை, 100 அடிக்கு விரிவாக்கம் செய்ய, அவ்விடத்தை அளக்க உத்தரவிட்டார்.வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதி குடியிருப்புக்குள், கழிவு நீர் வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, உடனடியாக வாய்க்காலை துார்வார உத்தரவிட்டார். அதன்பின், காந்தி பார்க், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளத்தை பார்வையிட்ட கமிஷனர், துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்ரமணியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மாதேஸ்வரன், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X