விதிமீறிய 500 பேருக்கு நோட்டீஸ்! கட்டடங்கள் மறுஅளவீட்டில் அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய 500 பேருக்கு நோட்டீஸ்! கட்டடங்கள் மறுஅளவீட்டில் அதிரடி

Added : அக் 08, 2021
Share
கோவை:கோவை மாநகராட்சியில் உள்ள வரி விதிப்பு கட்டடங்கள் மறுஅளவீடு செய்யப்படுகின்றன. விதிமீறல் குற்றத்துக்காக, 500 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சியில், 5.45 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். ஏராளமானோர், வரைபட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியிருப்பதாகவும், சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாகவும் புகார் வந்தது.அ.தி.மு.க., ஆட்சியின்

கோவை:கோவை மாநகராட்சியில் உள்ள வரி விதிப்பு கட்டடங்கள் மறுஅளவீடு செய்யப்படுகின்றன. விதிமீறல் குற்றத்துக்காக, 500 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.கோவை மாநகராட்சியில், 5.45 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். ஏராளமானோர், வரைபட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியிருப்பதாகவும், சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாகவும் புகார் வந்தது.அ.தி.மு.க., ஆட்சியின் போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ஒவ்வொரு கட்டடமாகச் சென்று, மறுஅளவீடு செய்து, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது, அப்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் தவறாக இருப்பதை கண்டறிந்தார்.அதனால், மீண்டும் ஒவ்வொரு வார்டாகச் சென்று, அனைத்து கட்டடங்களையும் மறுஅளவீடு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தாலோ, சொத்து வரி குறைவாக இருந்தாலோ, கட்டப்பட்டுள்ள அளவுக்கேற்ப சொத்து வரி நிர்ணயித்து, நோட்டீஸ் வழங்கி, வசூலிக்க, வருவாய் பிரிவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக, கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இதற்கு முன் சேகரித்த தகவல்கள் தவறாக இருப்பதால், மீண்டும் மறுஅளவீடு செய்யப்படுகிறது.விதிமீறல் தொடர்பாக, ஒவ்வொரு மண்டலத்திலும், 100 வீதம், 500 வரிவிதிப்புதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.'தினமலர்' செய்தியால் ரூ.1.64 கோடி வசூல்!ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ் வழங்க, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டிருந்தார். 17 நிறுவனத்தினர், ரூ.42.30 கோடி வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, 'டைடல் பார்க்' நிறுவனம், முதல் தவணையாக ரூ.1.64 கோடியை செலுத்தியுள்ளது. இ.எஸ்.ஐ., மருத்துவமனை நிர்வாகத்தினர் வைத்துள்ள நிலுவை தொகையை வசூலிப்பதற்கான முயற்சியில், வருவாய் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.வருவாய் பிரிவினர் வருத்தம்வருவாய் பிரிவினர் கூறுகையில், 'கட்டடங்களை மறுஅளவீடு செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மாநகராட்சியில் இருந்துதான் வருகிறீர்களா; அடையாள அட்டை இருக்கிறதா; மறுஅளவீடு செய்ய கமிஷனரோ, மண்டல உதவி கமிஷனரோ பிறப்பித்த உத்தரவு இருக்கிறதா என கேட்கின்றனர். வாக்குவாதம் ஏற்படுகிறது. மறுஅளவீடு செய்ய, மண்டல அளவில் 'டீம்' அமைக்க வேண்டும். வீதி வாரியாகச் செல்ல வேண்டும். ஒரு வீதியில், 100 வீடுகள் இருக்கிறதென்றால், ஒவ்வொரு வீடாகச் சென்று, தகவல்களை 'அப்டேட்' செய்ய வேண்டும். பில் கலெக்டர் ஏதாவது ஒரு கட்டடத்தை தேர்வு செய்து செல்வதால் சிக்கல் ஏற்படுகிறது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X