கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பூங்காவுக்கு ஒதுக்கிய பகுதியில் குப்பை கிடங்கு:சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை:'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பை கிடங்குகளை அமைக்கலாம்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாநகராட்சி வடவள்ளி பகுதியில், குழந்தைகள் விளையாடுவதற்காக திறந்தவெளி நிலம் மற்றும் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது. பின், அந்த இடத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பது என்று

சென்னை:'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் குப்பை கிடங்குகளை அமைக்கலாம்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி வடவள்ளி பகுதியில், குழந்தைகள் விளையாடுவதற்காக திறந்தவெளி நிலம் மற்றும் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டது. பின், அந்த இடத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உள்பட சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, அதற்கான திட்டத்தை அமல்படுத்துவது அவசியம். கழிவுகள் மற்றும் குப்பை கூளங்கள் இல்லாத சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டியதும் அரசின் கடமை.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தும் விதமாக, பூங்கா மற்றும் திறந்தவெளி நிலத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குப்பை கிடங்கு அமைக்கும் முடிவு அனுமதிக்கக் கூடியது தான்.விதிகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும், மாநில, மாவட்ட, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க, குழுக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும், குழுக்கள் பரிசீலிக்க வேண்டும். பூங்கா மற்றும் திறந்தவெளி நிலங்களில் அமைக்கப்படும் குப்பை கிடங்குகள், பயன்படாத நிலைக்கு சென்று விடாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.குப்பை கிடங்குகளை முறையாக பராமரிக்காத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X