பிளாஸ்டிக் வாய்க்கால் பார்த்திருக்கிறீர்களா! கரும்புக்கடையில் கண்டு அதிசயிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக் வாய்க்கால்' பார்த்திருக்கிறீர்களா! கரும்புக்கடையில் கண்டு அதிசயிக்கலாம்

Added : அக் 08, 2021
Share
கோவை:கரும்புக்கடையில் உள்ள வாய்க்காலில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவதால், அடைப்பு ஏற்பட்டு, ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. சுத்தம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாநகராட்சி 75, 86 வார்டுகளுக்கு உட்பட்ட பாத்திமா நகர் குழந்தை கவுண்டர் வீதி, மற்றும் பிலால் எஸ்டேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருப்போர், குப்பைகளை பிளாஸ்டிக்

கோவை:கரும்புக்கடையில் உள்ள வாய்க்காலில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவதால், அடைப்பு ஏற்பட்டு, ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. சுத்தம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாநகராட்சி 75, 86 வார்டுகளுக்கு உட்பட்ட பாத்திமா நகர் குழந்தை கவுண்டர் வீதி, மற்றும் பிலால் எஸ்டேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருப்போர், குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வாய்க்காலில் எறிந்து செல்வதே, இந்த பிளாஸ்டிக் வாய்க்கால் உருவாக காரணம். இதனால் அப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.குறுகலான சாலை, அதிக வாகன போக்குவரத்து உள்ள பகுதியாக உள்ளது கரும்புக்கடை. தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவால் நிரம்பியுள்ளது. நாள்கணக்கில் தேங்கி நிற்பதால், நாற்றம் சகிக்கவில்லை. சாலையோரங்களிலும் கட்டட கழிவுகளை குப்பையாக கொட்டி வைத்துள்ளனர்.அப்பகுதியை சேர்ந்த சபினா கூறுகையில், "எங்க வீடு எல்லாம் இந்த வாய்க்கால சுத்திதான் இருக்கு. இப்படி குப்பைய போட்டு அடைச்சிருக்கிறதால, சாயங்காலமானா கொசுத்தொல்லை தாங்க முடியலை. சில நேரங்கள்ல வீடுகளுக்குள்ளேயும் சாக்கடை நீர் புகுந்துக்குது.குழந்தைங்களுக்கு நோய் பரவுது. இந்த ஏரியாவுல இருக்கற குப்பைகளை சுத்தம் செய்ய, நாங்க முழு ஒத்துழைப்பு தர தயாரா இருக்கோம். தூர்வார்ற வேலைக்கு உதவி செய்யவும் தயாரா இருக்கோம். தூர்வாரி சுத்தம் செஞ்சு கொடுத்தால், குப்பை போடுறதை தடுக்க வலை வாங்கி வச்சிருக்கோம். எங்க குழந்தைங்களுக்காகவாவது மாநகராட்சி உடனே, இந்த பிளாஸ்டிக் சாக்கடையை சுத்தம் செய்யணும்,'' என்று கொட்டித்தீர்த்தார்.மனது வைக்க வேண்டும் மாநகராட்சி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X