பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு வசதிகள் எல்லாம் 'ஓகே'வா?பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில், தனியார் பள்ளி பஸ்களை போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போலீஸ் ஆகிய அரசுத்துறைகள் இணைந்து கூட்டாய்வு மேற்கொள்ளும் பணி கலெக்டர் சமீரன் தலைமையில் நேற்று நடந்தது.ஆய்வுக்குப்பின்பு கலெக்டர் கூறியதாவது:தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், பள்ளி வாகனங்களை முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகளின் படி 2012ன் படி,

கோவை:கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில், தனியார் பள்ளி பஸ்களை போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போலீஸ் ஆகிய அரசுத்துறைகள் இணைந்து கூட்டாய்வு மேற்கொள்ளும் பணி கலெக்டர் சமீரன் தலைமையில் நேற்று நடந்தது.ஆய்வுக்குப்பின்பு கலெக்டர் கூறியதாவது:தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், பள்ளி வாகனங்களை முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகளின் படி 2012ன் படி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உட்பட்ட, 230 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,226 பஸ்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி, வரும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.முதற்கட்டமாக, 309 பஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பஸ்சிலும் முதலுதவி பெட்டி, தீ தடுப்பான் உள்ளிட்டவை செயல்படும் நிலையிலும், காலாவதியாகாத வகையிலும் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது.வேகக்கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி., கேமரா, அவசர காலத்தில் வெளியேறும் வழி செயல்படும் நிலையிலுள்ளதா, படிக்கட்டு உயரம் பள்ளி குழந்தைகள் ஏறி இறங்கும் வகையில் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டது.பள்ளி வாகன டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும். வாகன இருக்கைகள், பள்ளி குழந்தைகள் அமருவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. வாகனத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.ஆய்வுக்கு நிறுத்தப்பட்டிருந்த பெரும்பாலான பஸ்களில், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படவில்லை. அதற்கான ஸ்டிக்கர்களும் ஒட்டப்படவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ''பள்ளி வாகனங்கள் அனைத்திலும் வேகக்கட்டுப்பாட்டுக்கருவி பொருத்தப்படும். அதற்கான ஸ்டிக்கர் வெளிப்பகுதியில் ஒட்டப்படும்,'' என்று கலெக்டர் சமீரன் கூறினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஆர்.டி.ஓ.,க்கள் சத்தியகுமார், குமாரவேல், பாலமுருகன், சிவகுருநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X