பொது செய்தி

தமிழ்நாடு

தரமான பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:''நாட்டில் தரமான பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,'' என, இந்திய பருத்தி கூட்டமைப்பு(கோவை) தலைவர் துளசிதரன் பேசினார்.சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், சர்வதேச பருத்தி தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'கஸ்துாரி' பருத்தி விழா இடம்பெற்றது. கல்லுாரி இயக்குனர் அல்லி ராணி முன்னிலை வகித்தார்.இந்திய பருத்தி

கோவை:''நாட்டில் தரமான பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,'' என, இந்திய பருத்தி கூட்டமைப்பு(கோவை) தலைவர் துளசிதரன் பேசினார்.சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், சர்வதேச பருத்தி தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'கஸ்துாரி' பருத்தி விழா இடம்பெற்றது. கல்லுாரி இயக்குனர் அல்லி ராணி முன்னிலை வகித்தார்.இந்திய பருத்தி கூட்டமைப்பு(கோவை) தலைவர் துளசிதரன் சிறப்பு விருந்தினராக பேசுகையில், ''சர்வதேச அளவில் நம் நாடு அதிகபட்ச பருத்தி உற்பத்தியாளராக திகழும் அதேவேளையில், சிறந்த நுகர்வோராகவும் உள்ளது. ''உலகளாவிய பங்கை அதிகரிக்க தரமான பருத்தி உற்பத்திக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இக்கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு ஜவுளித்துறையில் சிறந்த எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் இதுபோன்ற நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பருத்தி ஆடைகளை கொண்டு அலங்கார அணிவகுப்பு, பருத்தி குறித்து கலந்துரையாடல், 'ஜிங்கிள்' நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X