கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பூங்கா இடத்தில் குப்பை உர மையம்: மாநகராட்சிக்கு ஐகோர்ட் 'கிரீன் சிக்னல்'

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில், குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு, ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், குழுக்கள் அமைத்து, திடக்கழிவு மேலாண்மை விதிகள் பின்பற்றப்படுகிறதா என்றும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் சேகரமாகும் குப்பையை, அந்தந்த பகுதியிலேயே அழிக்க, 67 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் கட்ட, மாநகராட்சி முடிவு

கோவை:கோவையில் பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில், குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு, ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், குழுக்கள் அமைத்து, திடக்கழிவு மேலாண்மை விதிகள் பின்பற்றப்படுகிறதா என்றும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் சேகரமாகும் குப்பையை, அந்தந்த பகுதியிலேயே அழிக்க, 67 இடங்களில் உரம் தயாரிக்கும் மையம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.இடம் தேடி அலைந்தபோது, பூங்காவுக்கு ஒதுக்கிய, 'ரிசர்வ் சைட்'டுகள் தேர்வு செய்யப்பட்டன. வடவள்ளி பகுதியில், பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில், குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐகோர்ட்டில் அப்பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. நீதிபதிகள் மகாதேவன், பார்த்திபன், ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், பூங்கா மற்றும் திறந்தவெளி நிலத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் அமைப்பது அனுமதிக்கக்கூடியதே.இத்திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க மாநில, மாவட்ட, நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்; அதற்கான அதிகாரம் வழங்க வேண்டும்.அம்மையங்கள் பயன்படாத நிலைக்குச் சென்று விடாமல் இருக்க, விதிகள் வகுக்க வேண்டும். முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர். இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X