பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., ரூ.40,000 கோடி இழப்பீடு மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.மத்திய நிதியமைச்சகம் அறிக்கை: நடப்பு

புதுடில்லி:மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.மத்திய நிதியமைச்சகம் அறிக்கை: நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. கூடுதல் வரி வசூல் வாயிலாக 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மதிப்பிடப்பட்டிருந்தது.

இத்துடன் திரும்பப் பெறும் கடன் அடிப்படையில் 1.59 லட்சம் கோடி ரூபாய் வழங்க 43வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 2.59 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தொகையில் ஜூலையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி மாநிலங்களுக்கு மொத்தம் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை தவணையில் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X