தேசிய நெடுஞ்சாலையில் குழி: வாகன ஓட்டிகளுக்கு 'கிலி' 

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:தேசிய நெடுஞ்சாலை, மையப்பகுதியில் ஏற்பட்ட குழியால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.கொடுவாய் அருகே அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம் ரோடு, அரசமரம் ஸ்டாப் அருகே சேதமடைந்துள்ளது. இந்த இடத்தில், குழாய் உடைந்து குடிநீர் ஒரு வாரத்துக்கு மேலாக வீணாகியது. அதில் தொடர்ந்து வாகனங்கள் சென்று வந்ததால், அப்பகுதியில் சாலை குழியாகியுள்ளது.தற்போதும்

திருப்பூர்:தேசிய நெடுஞ்சாலை, மையப்பகுதியில் ஏற்பட்ட குழியால், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.கொடுவாய் அருகே அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம் ரோடு, அரசமரம் ஸ்டாப் அருகே சேதமடைந்துள்ளது. இந்த இடத்தில், குழாய் உடைந்து குடிநீர் ஒரு வாரத்துக்கு மேலாக வீணாகியது. அதில் தொடர்ந்து வாகனங்கள் சென்று வந்ததால், அப்பகுதியில் சாலை குழியாகியுள்ளது.தற்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கனரக வாகனங்கள் செல்லும் போது ஆட்டம் காண்கிறது. டூவீலரில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தாராபுரம் ரோடு வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் திருப்பூர் நோக்கி வருகிறது. விபத்து ஏற்படும் முன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியை மூடி, தார் சாலை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X