பல்லடம் தேசிய நெடுஞ்சாலை; நான்கு வழிச்சாலையாக்க திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடம் தேசிய நெடுஞ்சாலை; நான்கு வழிச்சாலையாக்க திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையும்

Added : அக் 08, 2021
Share
பல்லடம்:பல்லடம் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக்கும் திட்டம் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை-- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, கொச்சி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் பல்லடத்தில் இணைகின்றன. இதன் காரணமாக, கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.விபத்து
 பல்லடம் தேசிய நெடுஞ்சாலை; நான்கு வழிச்சாலையாக்க திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையும்

பல்லடம்:பல்லடம் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக்கும் திட்டம் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை-- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, கொச்சி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் பல்லடத்தில் இணைகின்றன. இதன் காரணமாக, கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.விபத்து அதிகம்சிறிய அளவில் நெரிசல் ஏற்பட்டாலும், பல்லடம் நகரம் ஸ்தம்பித்து விடுகிறது. உயிர்காக்கும் ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு வாகனங்களும் நெரிசலில் சிக்கும் அவலங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட புறவழிச்சாலை, மற்றும் ரிங் ரோடு திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுள்ளன.பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் குறுகிய ரோட்டையே வாகன ஓட்டிகள் இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர். விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வந்த போதும், பல ஆண்டுகளாக இப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நெரிசலுக்கு தீர்வுதேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பல்லடம், - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டதும் அதற்கான பணிகள் துவங்கும். இதேபோல், காங்கயம், - அவிநாசிபாளையம் வரையும் நான்கு வழிச்சாலையாக்கும் திட்டம் உள்ளது என்றார்.கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையில், நான்கு வழிச்சாலை திட்டமாவது உடனடியாக செயல்படுத்தப்பட்டு, பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.பல்லடம், - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டதும் அதற்கான பணிகள் துவங்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X